Spread the love

என் தெரு நாய்கள் மட்டும் எங்கும் உள்ளது இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவை தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும் ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய பொருட்கள் இலை தலைகள் உள்ளன ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால்தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது ஏன் உங்கள் வீட்டில் சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து சிறு பங்கு உணவை தர மாட்டார்களா என்று நப்பாசை கொள்கிறது சாலையோர கடைகளில் தள்ளுவண்டி கடைகளில் நீங்கள் தின்பண்டங்களை சாப்பிடும்போது ஏதேனும் உணவு கிடைக்காதா என்று இயங்கிக்கொண்டே அமைதி பார்த்துக்கொண்டிருக்கிறது குகையில் வாழ்ந்து பழகிய மனிதன் வீடுகட்டி பழகியவுடன் காடுகளிலிருந்து நாய்களை நகரத்திற்கு கொண்டு வருகிறான் ஆதிமனிதன் முதன்முதலில் மருத நிலம் நோக்கி வரும்போது அவன் மட்டும் வரவில்லை நமக்கு பயன்படக்கூடிய தன்னுள் அடக்கி ஆளக்கூடிய விலங்குகளை ஆடு மாடு நாய் போன்ற விலங்குகளை எல்லாம் அழைத்துக்கொண்டு தான் வந்தான் அவற்றுள் முதன்மையான விலங்கினம் நாய் ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய்தான் இன்றுவரை இன்றுவரை நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது நரி ஓநாய் சென்நாய் குடும்ப வகையை சார்ந்ததுதான் நாயும் அவைகளுக்கு இருந்த எல்லா குணமும் நாய்க்கும் இருந்தது ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது அதுதான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது அதுதான் நன்றி உணர்வும் அன்பும் எலி தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான் ஆனால் அன்பைத் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாயை பெற்றுவிட்டது வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் முயல் காட்டுப் பூனை போன்றவற்றை மனிதன் வேட்டையாட பொழுதுபோக்கு தேவைப்பட்டது வீட்டை காவல் காக்கும் இடத்தை நாய் பெற்றுவிட்டது சில வீட்டின் மதிப்பிற்கு ஏற்ற நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது பல நோய்களுக்கு இதுவே வீணாகி போனது மனிதன் என்ற சமூக விலங்கு என்றால் நாய் கிட்டத்தட்ட பாதி சமூக விலங்காக ஆகிவிட்டது உங்களுக்கு உங்களோடு அதற்கு பேச மட்டும் தான் தெரியாது ஆனால் நீங்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என அதற்கு நன்றாக தெரியும் வெளியூருக்கு போய்வந்த நம்மைப் பார்த்ததும் முன்னங்கால்களை தூக்கி மார்பில் வைத்து தாடையை நக்கும் வாலை ஆட்டிக்கொண்டு நம்முடன் கூடவே வரும் உங்களுக்கு யார் மூலமாவது தீங்கு நேரிட்டால் ஒரு கை பார்த்துவிடும் இவை அத்தனையும் செய்ய அடைக்கலமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை அப்படியானால் வீடு இல்லாத நாய்களின் நிலை வீடு கிடைத்தால் நாய் செல்லப்பிராணி ஆகிவிடுகிறது கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்கப்படுகிறது பார்க்குமிடமெல்லாம் கல்லடி படுகிறது தெரு நாய்கள் அடி வாங்குவதற்காகவும் வண்டியில் அடிபட்டு சாகவும் படைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது அலைந்து அலைந்து இதைவிட ரத்தமே அதன் உடலில் அதிகமாக வருகிறது உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி சாகிறது இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போதே அதே தெருவில் காட்டிலிருந்து வரும்போது அதை எந்த மனித குலத்தை நம்பி வந்ததோ அந்த மனிதரும் எந்த சம்பந்தமும் இல்லாமல் தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த நாய்களை ஏறெடுத்துப் பார்க்கக் கூட நேரமில்லை பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் ஒரு விலங்கை வேரோடு இடம் பெயர்த்து அடியோடு அதன் குணத்தை உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு தற்போது அவர்களுக்கு உணவைத் தர மறுப்பது யார் தவறு ஆனால் பாருங்கள் நன்றிகெட்ட நாய் என்ற சொல்லை நாம் வைத்திருக்கிறோம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது யார் கடமை தெரு நாய்கள் இன்று காட்டிற்கு சென்று வாழவும் முடியாது நாட்டிற்குள் வாழ ஆதாரம் கிடையாது தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது அதனால்தான் நீங்கள் சாப்பிடும்போது தெருவில் நின்று உங்கள்
தட்டையேவெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது இது ஒரு கைவிடப்பட்ட விலங்கின் கண்ணீர் கட்டுரையாளர்; சாது வெங்கடேஷ் ஷர்மா


administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *