ஈழத்தில் இன அழிப்பு செய்தது யார் ?அதற்கு துணை போன கட்சிகள் யார்? அரைநாள் உண்ணாவிரத நாடகம் நடத்தியது யார் ? என் சகோதரிகள் தாலி அறுக்க யார் காரணம்? தமிழ் மக்களை அழித்த ராஜபக்சேக்கு துணைபோன கட்சி எது ?அவரை சென்று பார்த்து பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தவர்கள் யார்? ஈழத்தில் முத்தையா முரளிதரனின் செயல்பாடுகள் மிக மிக கேவலமானது இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை அதேநேரம் விஜய்சேதுபதியை மட்டும் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூச்சலிடும் நபர்கள் அந்த பட தயாரிப்பாளருக்கு எதிராக குரல் கொடுக்க முடிந்ததா? தயாரிப்பாளர் படத்தையே தயாரிக்கவில்லை என்றால் விஜய்சேதுபதி எப்படி நடிப்பார் விஜய் சேதுபதி விலகினாலும் வேறு யாராவது அந்த படத்தில் நடிப்பார்கள் நம் இனத்தை அழிப்பதற்கு துணைபோன காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்து உள்ளது தமிழ் இனத்தை அழித்த காங்கிரஸ் தலைவரை பிரதமர் ஆக்குவேன் என்று சூளுரைத்து தமிழகம் முழுவதும் சுற்றி வந்து ஓட்டு கேட்ட திமுக தலைவரை கண்டிக்காதது ஏன்? இப்பொழுது குரல் கொடுக்கும் தலைவர்கள் எல்லாம் சென்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களா? இல்லையே விஜய்சேதுபதியை மட்டும் குறி வைப்பது ஏன்? நான் பாடம் புகட்ட வேண்டியது அந்த படத்தை எடுத்த துணிந்த தயாரிப்பாளருக்கு தான் அந்தப் படத்தை யாரும் பார்க்கக்கூடாது யாரும் திரையிடக்கூடாது யாரும் வினியோகம் செய்யக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துமா? அப்பொழுதுதான் அந்த தயாரிப்பாளருக்கு புத்தி வரும் இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்வதென்றால் அந்தப் பட தயாரிப்பாளர் எதிராக போராட்டம் நடத்துவார்களா? அந்தப் படத் தயாரிப்பாளரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கலாமா? இதையெல்லாம் விட்டுவிட்டு விஜய்சேதுபதியை மட்டும் நடிக்க வேண்டாம் என்று குரல் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? இனியும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை வரும் தேர்தலில் ஆவது தமிழ் அமைப்புகள் எல்லாம் நம் இனத்தை அழித்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்களா? உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் பிரச்சாரம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.இல்லையென்றால் இவர்களெல்லாம் போலியாக கண்ணீர் விடுபவர்கள் என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் முத்தையா முரளிதரனுக்கு சம்பளம் கொடுத்து பயிற்சியாளராக நியமித்து இருக்கும் திமுக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடதுவார்களா? குறைந்தபட்சம் கண்டனக் குரலாவது எழுப்புவார்களா ?மானமுள்ள தமிழர்கள் இரட்டைவேடம் போடும் திமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் இப்படிக்க                                            M.R. சீனிவாசன் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *