கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில்
கலந்து கொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.
அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்ததது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த
கை தட்டல் எழுந்தது. வாசித்து முடித்ததும் கரவொலி
அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்தததும் , கண்ணதாசன் சொன்னார் ,
இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.
உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை
எழுதிக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை
அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை
நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித
ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை
நான் வாசிக்கும்போது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யாரென்றுதான் உலகம் பார்க்கின்றதே
ஒழிய, சொல்லும் பொருளைப்
பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.
( இன்று நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நம்மிடமே இருக்கின்றன ஆனால் ஒரு பிரபலம் சொன்னால் மட்டுமே அந்த பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் மக்கள் இருக்கின்றனர் சாதாரண மக்கள் சொல்லும் எந்த தீர்வும் யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை. துண்டு சீட்டை பார்த்து தப்புத்தப்பாக படித்தால் கூட இது அவரின் கருத்து என்று பொது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது ஏனென்றால் அவர் ஒரு பிரபலம் இதுவே உண்மை)

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *