பஞ்ச வேதி வித்யா பூஜை என்றால் என்ன?

நவராத்திரி காலத்தில் வரும் மூல நட்சத்திரம் நாளில் கல்விக்குரிய தெய்வமாகிய சரஸ்வதி தேவியை களிமண் உருவத்தில் செய்ய வேண்டும். அன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தினமும் அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும்.

கலைமகள் துதி, கலைமகள் போற்றி போன்றவைக அல்லது சமஸ்கிருத மந்திரங்களை ஜெபித்து மனப்பூர்வமாக வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாளான அவிட்ட நட்சத்திர தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விஜர்சனம் போன்று கலைமகள் சரஸ்வதியை ஆறு அல்லது குளம் அல்லது கடல் அல்லது கிணற்றில் கரைக்க வேண்டும்.

இந்த ஐந்து நாட்களும் சரஸ்வதிதேவி நமக்கு அருள் புரிவதாக ஐதீகம். பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்த நடைமுறை நம்முடைய பாரத நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது.தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த சரஸ்வதி விஜர்சனம் பூஜை நடைபெற்று கொண்டிருக்கிறது.

சார்வரி வருடம் புரட்டாசி மாதம் நவராத்திரி காலத்தில் உள்ள மூல நட்சத்திரம் ஆனது 21.10.2020 புதன்கிழமை காலை 8:28 க்கு மூல நட்சத்திரம் உதயமாகிறது.

அதன்பிறகு களிமண்ணால் ஆன சரஸ்வதி தேவியை வடிவமைத்து நமது இல்லத்திற்கு கொண்டு வரவேண்டும்.(இந்த வருடம் புரட்டாசி மாதம் இரண்டு அமாவாசைகள் உள்ள மல மாதமாக அமைந்திருக்கிறது. எனவே அடுத்து வரும் ஐப்பசி மாதத்தில் நவராத்திரி வர இருக்கிறது)

(பள்ளி ,கல்லூரி நடத்துபவர்கள்,

தொழிற் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள்,

டுட்டோ ரியல் நடத்துபவர்கள்,

ஸ்போக்கன் ஹிந்தி நடத்துபவர்கள்,

ஸ்போக்கன் இங்கிலீஷ் நடத்துபவர்கள்,

ஜோதிட பயிற்சி பள்ளிகள் நடத்துபவர்கள்,

வாஸ்து மற்றும் யோகா பயிற்சி மையம் நடத்துபவர்கள்,

ப்ராணயாமம் சொல்லித் தருபவர்கள்,

ஹீலிங் பயிர்ச்சி சொல்லித் தருபவர்கள்,

குருகுல முறைப்படி சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் சொல்லித் தருபவர்கள்,

ஆன்மீகப் பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சிப் பள்ளிகள் நடத்துபவர்கள்,

சிற்பக் கல்லூரி நடத்துபவர்கள்,

ஓவியப் பயிற்சி சொல்லித் தருபவர்கள்,

மரங்களில் சிற்பங்களை செதுக்க சொல்லித் தருபவர்கள்,

இயற்கை நலவாழ்வு மையம் நடத்துபவர்கள்,

சிறுதானிய உணவு பற்றிய விழிப்புணர்வுக்கு மாதந்தோறும் பயிற்சி முகாம் நடத்துபவர்கள்,

வேதபாடசாலை நடத்துபவர்கள்,

சைவசித்தாந்த பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள்,

சித்தர்கள் மருத்துவம், சித்தர்கள் மாந்திரீகம் பயிற்சிப்பள்ளி நடத்துபவர்கள்,

சிவாலயங்களில் வாசிக்கப்படும் பஞ்ச வாத்தியம் வாசிக்க சொல்லித்தரும் சிவனடியார்கள்,

சிவாச்சாரியார்களை உருவாக்கும்
உருவாக்கும் உருவாக்கும் பயிற்சிப்பள்ளி நடத்துபவர்கள்,

தமிழ்நாட்டிற்கு வெளியே வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ்மொழி சொல்லித்தரும் பள்ளிகள் நடத்துபவர்கள்,

சித்தர்கள் உபதேசம் செய்து இருக்கும் தெய்வீக ரகசிய கலைகளை தகுந்த சீடர்களுக்கு சொல்லித் தருபவர்கள்

– இதை செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். அவர்களுடைய மாணவர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகப்படுத்தும். நிர்வாகத்தில் இருக்கும் பல்வேறு விதமான குளறுபடிகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.)

25.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7 34 முதல் 26 .10.2020 திங்கட்கிழமை காலை 8 31 வரை அவிட்ட நட்சத்திரம் அமைந்திருக்கிறது. திங்கட்கிழமை காலை எட்டு முப்பது மணிக்குள் சரஸ்வதி தேவியை ஆறு அல்லது குளம் அல்லது கிணறு அல்லது கடலில் கரைக்க வேண்டும்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *