பத்திரிக்கை செய்தி

நாள்: 02.11.2020
இடம் : நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மருத்துவக்கல்லூரி கட்டுமானம் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதால் இடிந்து விழுந்த அவலம் ஆம் ஆத்மி கட்சி தேச கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுதா கண்டனம் !

தமிழக அரசாங்கம் நாமக்கல் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை வழங்கியது. அந்த கல்லூரிக்கான புதிய கட்டிடம் 336 கோடி ரூபாயில் கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கல்லூரி கட்டப்பட வேண்டும் என்கிற அரசியல் லாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டதால் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலங்களில் அதற்கான தரமான கட்டிடங்கள் கட்டுவதற்கான கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் இரவு பகலாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வைத்து தரமற்ற முறையில் அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இதனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக அதிகாலை நேரத்தில் முகப்பு பகுதி இடிந்து விழுந்து உள்ளதாகவும் பலர் அதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கிறது. இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார். அமைச்சரோ இந்த கட்டிடம் தானாக இடிந்து விடவில்லை தரமாகத்தான் கட்டப்பட்டு உள்ளது. அதிகாரிகள் அதை இடித்துவிட்டு மாற்று திட்டத்தில் கட்டுவதற்காக எடுத்த முயற்சி தானே தவிர கட்டிடம் தரமானதாக உள்ளதாக தெரிவிக்கிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசகட்டமைப்பின் சார்பாக நான் மற்றும் சேலம் மாவட்ட தொடர்பாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரடியாக அந்த கட்டிடத்தை பார்வையிட்ட போது அங்கிருந்த தொழிலாளர்களும் என்னிடத்திலே கான்கிரீட் போடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அது சரிந்து விழுந்ததாகவும் அதிலே காயம்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்கள். ஆகவே உண்மை நிலையை மூடிமறைக்க அமைச்சர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தான் அரசியல் லாபம் தேடுவதற்காக பல ஆண்டுகள் குறிப்பாக நூறு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் அதற்கான பாடங்களைக் கற்பிப்பதற்கான மருத்துவர்களை உருவாக்குகிற தகுதிவாய்ந்த கட்டிடத்தை குறுகிய அரசியல் லாபத்திற்காக தரமற்ற முறையில் கட்டப்படுவது தமிழ்நாட்டில் அம்பலப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் கட்டிட ஒப்பந்ததாரரிடம் 25 சதவீதம் வரையிலும் அவரிடத்தில் கமிஷனாக பெறப்பட்டு உள்ளதாகவும் ஆதாரமற்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. எனவே எதிர்கால நலன் கருதி தமிழக முதலமைச்சர் உயர்மட்ட தொழில் நுட்ப குழுவை அனுப்பி வைத்து கட்டிடம் முழுமையும் தரமாக கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் மேற்கொண்டு அந்த கட்டிடம் தரமானதாக கட்டப்பட்டு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான நிலையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இதனை தங்கள் பத்திரிக்கை ஊடக வாயிலாக வெளியிட வேண்டுகிறேன்.

தங்கள்

சுதா தர்மலிங்கம்
தேச கட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆம் ஆத்மி கட்சி
(9962000968)

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *